ஜோதிடம் என்பது பூமிமையக் கோட்பாடு கொண்டுள்ளதா
ஜோதிடம் என்பது பூமிமையக் கோட்பாடு கொண்டுள்ளதா ? பதில் :- இல்லை. சூரிய மைய கோட்பாட்டை கொண்ட அறிவியல் தான் ஜோதிடம் . நம் ஞானிகளும் ரிஷிகளும் வழங்கிய ஜோதிடம் என்பது ஒருபோதும் தவறாகாது. நாம் புரிந்து கொள்வதில் தான் தவறு இருக்கிறது. மேம்போக்காக ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் என்று குறிப்பிட்டவை அனைத்தும் உண்மையிலேயே வானில் வலம் வருபவைகளே. அவை சுயஒளியை கொண்டதாகவோ (அ) சுயஒளியற்றதாகவோஇருக்கும். கீழ்க்கண்ட சில காரணங்கள் கொண்டு சூரிய மைய கோட்பாடு தெளிவாக விளங்கி கொள்ளலாம். 1. சாயாகிரகங்கள் 2. உச்சம்/ நீச்சம்/ஆட்சி 3. சூரியன் சந்திரன் இவற்றிக்கு மட்டும் தலா ஒரு ஆட்சிவீடு மற்றவற்றிற்கு தலா இருஆட்சி வீடுகள். ராகுகேது இவற்றுக்கு ஆட்சி வீடு இல்லாதது. கிரகங்களின் வரிசையில் இருவர் ராகு & கேது எனப்படும் சாயாகிரகங்கள் . இவற்றின் சுற்றுபாதை மற்ற கிரகங்களின் வழக்கமான திசையின் எதிர் திசையில் அமையும் என சொல்லப்படுகிறது. இது புவியின் சுற்று பாதையுடன் சந்திரனின் சுற்றுபாதை பெரும்...