கர்ம வினை, கடவுள் நம்பிக்கை..... பற்றிய அறிவு சிந்தனை.

கடவுள் நம்பிக்கை மற்றும் கர்மவினை என்பன எதற்காகச் சொல்லப்படுகிறது?
     
        நாம் அனைவரும் சமூகத்தில் ஒருவரை ஒருவர் மதித்து,  சண்டைச் சச்சரவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்தில் சொல்லப்பட்டதே இந்தக் கர்மவினை என்கிற அனைத்தும்.

       மனித இனத்தில் அமைதி நிலவ  கர்ம வினை என்ற ஒரு அச்சம் அவசியம் தேவை. 

      கர்மவினை , கடவுள் நம்பிக்கை இவைகளைக் கொண்டு சமூகத்தில் உள்ள பல்வேறு வகையானப் பிரச்சினைகளை எல்லாம்  சமாளிக்கவும் மேற்கொண்டுத் துவன்டுவிடாமல் நம்பிக்கையுடன் வாழ்க்கை முறையைத் தொடர  நம் முன்னோர்களால் செய்யப்பட்ட ஏற்பாடு.
     
       கர்மவினைக்  கோட்பாடு தோன்ற  எளியவனை பலசாலி மதிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அடிப்படை. 
     
      உலகில் வாழும் அனைத்து வகையான உயிரினங்களில் உயர் வானாது இம்மனித இனம்.  இது நிம்மதியாக வாழ விரும்பும் 6 அறிவை கொண்ட மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதை அத்தகையோர் மட்டுமே ஏற்பர்.  6 அறிவு அற்றவைகள்,  வனவிலங்குங்கள் எல்லாம் இவற்றில் இருந்து விலகி இருக்கும்.

By
sureshCtelker

Comments

Popular posts from this blog

நட்சத்திர சாரம் , மூலதிரிகோணம் பற்றிய அறிவியல்

நேர்மையும் .. லக்னத்திற்கு எட்டாம் இடமும்.

ஜோதிடம் என்பது பூமிமையக் கோட்பாடு கொண்டுள்ளதா