ஜோதிடம் என்பது பூமிமையக் கோட்பாடு கொண்டுள்ளதா

ஜோதிடம் என்பது பூமிமையக் கோட்பாடு கொண்டுள்ளதா?

பதில் :-  இல்லை. சூரிய மைய கோட்பாட்டை கொண்ட அறிவியல் தான் ஜோதிடம்.

       நம் ஞானிகளும் ரிஷிகளும் வழங்கிய ஜோதிடம் என்பது ஒருபோதும் தவறாகாது. நாம் புரிந்து கொள்வதில் தான் தவறு இருக்கிறது. மேம்போக்காக ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் என்று குறிப்பிட்டவை அனைத்தும் உண்மையிலேயே வானில் வலம் வருபவைகளே. அவை சுயஒளியை கொண்டதாகவோ (அ) சுயஒளியற்றதாகவோஇருக்கும்.
 
     கீழ்க்கண்ட சில காரணங்கள் கொண்டு சூரிய மைய கோட்பாடு தெளிவாக விளங்கி கொள்ளலாம்.
1. சாயாகிரகங்கள் 
2. உச்சம்/ நீச்சம்/ஆட்சி
3. சூரியன் சந்திரன் இவற்றிக்கு மட்டும் தலா ஒரு ஆட்சிவீடு மற்றவற்றிற்கு தலா இருஆட்சி வீடுகள். ராகுகேது இவற்றுக்கு ஆட்சி வீடு இல்லாதது.

      கிரகங்களின் வரிசையில் இருவர் ராகு &  கேது எனப்படும் சாயாகிரகங்கள் . இவற்றின் சுற்றுபாதை மற்ற கிரகங்களின் வழக்கமான திசையின் எதிர் திசையில் அமையும் என சொல்லப்படுகிறது.

      இது புவியின் சுற்று பாதையுடன் சந்திரனின் சுற்றுபாதை பெரும்  வெட்டுப்புள்ளிகள். இவற்றின் நகர்வுகள் எப்போதும்  180° எதிரெதிரே தானே இருக்கும். மேலும் அவை வழக்கமான கிரகங்கள் நகர்வுக்கு  ஏற்ப எதிர்திசையில் தானே நகரும்.
2 &3 காரணங்களை ஏற்கனவே தனியாக ஒரு தலைப்பில் விளக்கியுள்ளேன்.

        இப்படி அனைத்து நகர்வுகளை மிகவும் நுணுக்கமாக கணித்தவர்கள் நம்முன்னோர்கள்.
நாம் இருக்கும் இடத்தில் இருந்து வானில் நகரும் கிரகங்களின் அமைப்பை ஒரு எளிமையான முறையில் கணிதப்படுத்தியுள்ளனர். 

       முதலில் சூரியனைமையமாக கொண்டு கோள்களின் நகர்வுகளை புரிந்து கொண்டு பிறகு பூமியில் நாம் உள்ள இடத்திற்கு ஏற்ப அவைகள் எங்ஙனம் நகர்ந்து கொண்டு உள்ளன எனகணித்து தந்துள்ளனர்.
By
Suresh c telker

Comments

Popular posts from this blog

நட்சத்திர சாரம் , மூலதிரிகோணம் பற்றிய அறிவியல்

நேர்மையும் .. லக்னத்திற்கு எட்டாம் இடமும்.