நட்சத்திர சாரம் , மூலதிரிகோணம் பற்றிய அறிவியல்


   அமாவாசை நாளில் சந்திரன் மட்டும் தெரிவதில்லை.  சூரிய சந்திரர் ஒரே சமயத்தில் உதித்து வருவதாலும், தொலைவு & சூரியனின் அதீத ஒளியும் காரணமாகிறது. ஆனால் அவ்விரு சூரிய சந்திரன் ஆற்றலை உணரலாம். எகா. கடல்அலை. இது நாம் அனைவரும் அறிந்ததே. இதை மனதில் வைத்து கொண்டு  அப்படியே அடுத்த கட்டம் செல்வோம்.
*நட்சத்திர சாரம்.* என்றால் என்ன?
ஒரு ராசியில் 9 பாதம் என்றால் ஒன்பது வகையான வடிவில் தெரியும்  நட்சத்திர தொகுப்புகள். அவை ஒவ்வொன்றும் அவைகளுக்கே உரிய  ஒளியையும் ஆற்றலையும் வெளியிடும் தன்மை கொண்டது.
ஒளி கிரகமோ அல்லது ஒளியற்ற கிரகமோ பல கோடி மைல்கள் அப்பால் உள்ள நட்சத்திர தொகுப்பினை பின்புலமாக பெரும் சமயம் அவற்றின் ஆற்றலைகளையும் ஒளிகளையும் பெற்று நம்மீது பிரதிபளிக்கின்றன.
இதனை நட்சத்திர சாரம் எனலாம்.
இந்த நடசத்திர சாரத்தில் ஆதித சிறப்பு பெற்றதே மூலதிரிகோணம் ஆகும்.
குறித்த நட்சத்திர தொகுப்பினை பின்புலமாக கொண்டு குறிப்பிட்ட கிரகம் வரும்போது, அந்த நட்சத்திர தொகுப்பின்  அதீத ஆற்றலையும் ஒளியையும்  பெற்று அதனை  அக்கிரகம் நம்மீது செலுத்தும் என்பதே
*மூலத்திரிகோணம்* .
இதற்கும் உச்ச நீச்ச வீடுகளுக்கும் சம்பந்தமே இல்லை.
"உச்சம்  , நீச்சம் " என்பது நமக்கும் கோளுக்கும் உள்ள தூரத்தை பொருத்தது.


By
Sureshtelker

Comments

Popular posts from this blog

நேர்மையும் .. லக்னத்திற்கு எட்டாம் இடமும்.

ஜோதிடம் என்பது பூமிமையக் கோட்பாடு கொண்டுள்ளதா