சூரியன் ஒரு கிரகமே...அறிவியல் விளக்கம்

சூரியன் ஒரு கிரகமே...அறிவியல் விளக்கம்

சூரியன் ஒரு கிரகமா? 
அன்டசராசரத்தில் உலவும் அனைத்து வகையான பொருட்கள் கிரகங்கள்/கோள்கள் என ஏற்று கொள்கிறோம்.   இவை பஞ்ச பூதங்களில் ஒன்றை அல்லது பலவற்றை ஒருங்கே கொண்டுள்ளது. ஏன் தற்போது ராக்கெட் கொண்டு ஏவி அண்டத்தில் நிறுத்தி வைக்கப்படும்  உலோகத்தையும் செயற்கை கோள் என ஏற்கிறோம். சந்திரனை துணை கோள்/கிரகம் என்கிறோம்.

ஆனால் சூரியனை மட்டும் கிரகம் அல்ல அது ஒரு நட்சத்திரம் என்கிறோம். நம் ஞானிகள் தவறாக கிரகம் என்று சொல்லி உள்ளனர் என சிலர் விவாதம் செய்து வருகின்றனர். ஏன் நம்மில் சில  ஜோதிட நண்பர்கள் கூட விவாதங்களில் பங்கு பெற்று சூரியன் கிரகம் அல்ல என்பதை ஏற்று கொள்கின்றனர். காரணம் அது நிலையான ஒன்று. மற்ற கிரகங்கள் அதை சுற்றி வருகின்றன என்று அவர்கள் படித்துள்ளனராம்.

அவர்கள் கூற்றுப்படியும் பார்த்தால் *நகரும் வான்பொருள் கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது*

உண்மை நிலை என்ன என்றால் பால்வெளி மண்டலத்தில் அதாவது  வானில் உள்ள அனைத்தும் நகர்ந்து கொண்டுதான் உள்ளன. நட்சத்திர கூட்டங்களும்தான். ஆம் சூரியன் உள்பட.  சூரியன் பஞ்ச பூதவகையில் நெருப்பு என்பதை ஏற்கிறோம்.

மொத்த வான்பொருட்களையும் முதலில் கிரகங்கள் என ஒரே ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து பிறகு  சுய ஒளியற்றவைகளை சாதாரண 'கிரகம்' எனவும் , சுய ஒளியுள்ளவற்றை மட்டும் "நட்சத்திர கிரகம்'  என சிறப்பித்து சொல்லி இருப்பர்.

 காலப்போக்கில் 'நட்சத்திரகிரகம்' என்றசொல் "நட்சத்திரம்" என சுுருங்கி இருக்கலாம்.

அத்தகைய சுய ஒளி கொண்ட வான்பொருளாகிய சூரியனும் நகர்வதால் சூரியனை 'கிரகம்' என்று ஏற்பதில் தவறில்லையே.
By
Sureshtelker

Comments

Popular posts from this blog

நட்சத்திர சாரம் , மூலதிரிகோணம் பற்றிய அறிவியல்

நேர்மையும் .. லக்னத்திற்கு எட்டாம் இடமும்.

ஜோதிடம் என்பது பூமிமையக் கோட்பாடு கொண்டுள்ளதா