அமாவாசை நாளில் சந்திரன் மட்டும் தெரிவதில்லை. சூரிய சந்திரர் ஒரே சமயத்தில் உதித்து வருவதாலும், தொலைவு & சூரியனின் அதீத ஒளியும் காரணமாகிறது. ஆனால் அவ்விரு சூரிய சந்திரன் ஆற்றலை உணரலாம். எகா. கடல்அலை. இது நாம் அனைவரும் அறிந்ததே. இதை மனதில் வைத்து கொண்டு அப்படியே அடுத்த கட்டம் செல்வோம். * நட்சத்திர சாரம். * என்றால் என்ன? ஒரு ராசியில் 9 பாதம் என்றால் ஒன்பது வகையான வடிவில் தெரியும் நட்சத்திர தொகுப்புகள். அவை ஒவ்வொன்றும் அவைகளுக்கே உரிய ஒளியையும் ஆற்றலையும் வெளியிடும் தன்மை கொண்டது. ஒளி கிரகமோ அல்லது ஒளியற்ற கிரகமோ பல கோடி மைல்கள் அப்பால் உள்ள நட்சத்திர தொகுப்பினை பின்புலமாக பெரும் சமயம் அவற்றின் ஆற்றலைகளையும் ஒளிகளையும் பெற்று நம்மீது பிரதிபளிக்கின்றன. இதனை நட்சத்திர சாரம் எனலாம். இந்த நடசத்திர சாரத்தில் ஆதித சிறப்பு பெற்றதே மூலதிரிகோணம் ஆகும். குறித்த நட்சத்திர தொகுப்பினை பின்புலமாக கொண்டு குறிப்பிட்ட கிரகம் வரும்போது, அந்த நட்சத்திர தொகுப்பின் அதீத ஆற்றலையும் ஒளியையும் பெற்று அதனை அக்கிரகம் நம்மீது செலுத்தும் என்பதே ...
நேர்மையும் லக்னத்திற்கு எட்டாம் இடமும் ஜாதகத்தில் உள்ள 8- ம்மிடம் கொண்டு ஆய்வு செய்து நேர்மை குறித்த முடிவுக்கு வரலாமே என தோன்றியது. அதை தங்களிடம் பகிர்ந்துள்ளேன். சாதாரணமாக 8 மிடம் ஒளி கிரகங்கள் அல்லது அதன் பார்வையில் இல்லாமல் இருக்கும் போது அந்த ஜாதகர் நேர்மையற்றவர். அவரின் ரகசியம் வெளிபடாது. அவரே சொன்னால்தான் வெளிபடும். வேறு எவரேனும் அதை தெரிந்து கொள்ள முயற்சி செய்தால் அம்முயற்சி தோல்வியை தழுவும். எட்டாம் இடத்திற்கு கிடைக்கும் ஒளிகிரகங்கள் அவற்றின் பார்வை இவற்றைப் பொருத்து அவரின் வெளிப்படைதன்மை இருக்கும். By Suresh c telker
ஜோதிடம் என்பது பூமிமையக் கோட்பாடு கொண்டுள்ளதா ? பதில் :- இல்லை. சூரிய மைய கோட்பாட்டை கொண்ட அறிவியல் தான் ஜோதிடம் . நம் ஞானிகளும் ரிஷிகளும் வழங்கிய ஜோதிடம் என்பது ஒருபோதும் தவறாகாது. நாம் புரிந்து கொள்வதில் தான் தவறு இருக்கிறது. மேம்போக்காக ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் என்று குறிப்பிட்டவை அனைத்தும் உண்மையிலேயே வானில் வலம் வருபவைகளே. அவை சுயஒளியை கொண்டதாகவோ (அ) சுயஒளியற்றதாகவோஇருக்கும். கீழ்க்கண்ட சில காரணங்கள் கொண்டு சூரிய மைய கோட்பாடு தெளிவாக விளங்கி கொள்ளலாம். 1. சாயாகிரகங்கள் 2. உச்சம்/ நீச்சம்/ஆட்சி 3. சூரியன் சந்திரன் இவற்றிக்கு மட்டும் தலா ஒரு ஆட்சிவீடு மற்றவற்றிற்கு தலா இருஆட்சி வீடுகள். ராகுகேது இவற்றுக்கு ஆட்சி வீடு இல்லாதது. கிரகங்களின் வரிசையில் இருவர் ராகு & கேது எனப்படும் சாயாகிரகங்கள் . இவற்றின் சுற்றுபாதை மற்ற கிரகங்களின் வழக்கமான திசையின் எதிர் திசையில் அமையும் என சொல்லப்படுகிறது. இது புவியின் சுற்று பாதையுடன் சந்திரனின் சுற்றுபாதை பெரும்...
Comments
Post a Comment