எங்கோ உள்ள கிரகம் நம்மை பாதிக்கும் போது, பூமியும் ஒரு கிரகம் தானே? அதன் பாதிப்பு கிடையாதா.? ஜாதகக் கட்டத்தில் பூமி இல்லை.ஏன்?


இது உண்மையில் குறும்புதனமான கேள்வி.

இது பொதுவாக பகுத்தறிவறிவளர் என சொல்லிக்கொள்பவர்களால் கேட்கப்படும் நையாண்டி தனமான கேள்வி.
பகுத்தறிவு= பகுத்து+ அறிவு . இவர்களிடம் டிவி விவாதங்களில் பங்கு பெற்று பதில் சொல்ல முடியாது திரும்பிய நம்ம பிரபல ஜோதிடர்களின் வீடியோக்கள் பார்த்து அதன் பாதிப்பு காரணமாக நான் கூகுளில் ப்ளாக் போட்டு ஜோதிடமும் வானியல் உண்மைகளும் by sureshctelker என்ற தலைப்பில் விளக்கம் அளித்துள்ளேன்.

இனி பதிலுக்கு வருவோம்.

மூன்றாவது வகுப்பு போனவர்கள் பூமியில் மட்டுமே  உயிரினங்கள் வாழ தகுதி வாய்ந்த இடம் என படித்து இருப்பர்.

அப்படி என்றால் இங்கே மட்டுமே பஞ்ச பூதங்களின் தாக்கம் நமக்கு ஜனனம் பெற்று வளர்ச்சிதை மாற்றம் ஏற்படும் வண்ணம் உள்ளது.
இதுமட்டுமின்றி ஈர்ப்பு விசை காரணமாகதான் நாம் இருக்கிறோம்.
இங்கு மட்டுமே அனைத்து உயிர்களுக்கு வேண்டிய அனைத்தும் கிடைக்கும்.
இவை பூமியால் நமக்கு கிடைக்கும் பாதிப்பு தானே.

வேறு கிரகங்களில் இப்பஞ்ச பூதங்களில் ஏதாவது ஒன்று மட்டுமே.  இருக்கலாம்.

அப்படி பட்ட பூமியில் இருந்து கொண்டிருக்கும் நமக்கு அண்டத்தில் உள்ள சூரியனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது? சந்திரனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது?  வேறு கிரகங்கள்... நட்சத்திரங்கள்...என விஞ்ஞான ரீதியாக மனித இனம் தேடி தேடி இந்த ஜோதிட விஞ்ஞானம்  பெற்றுள்ளது.

இனி ஜாதககட்டத்தில்  பூமி இல்லையே என வருத்தப்படும் நண்பர்கள் அனைவரும் இந்த ரயில் கதையை ஆராய்ச்சி செய்யனும்.

ஆமாம்... நம்ம எல்லோரையும் சுமந்து கொண்டு செல்லும் ரயில் தான் பூமி என வைத்துக்கொள்வோம்.
அதில் உள்ளவர் ரயிலினுள் உள்ள நன்பர்களை தேடலாம். சன்னல் வழியே வெளியே தெரியும் இடங்களையும் தேடலாம்.
ஆனால், ரயிலையே தேடுவது எப்படியோ அது போல தான் ஜாதககட்டத்தில் பூமியை தேடுவதும்.

இதற்கு தான் இந்த ஜோதிட அறிவியல் என்பது பொருள், தூரம், காலம், நகர்வு நன்மை தீமை என பல வகையான சூத்திரங்கள் தந்துள்ளனர். இவற்றை பகுத்து+ அறிந்து கொண்டால் ஜோதிடம் அறிவியல் என ஒப்புக்கொள்வர்.

By
Suresh C telker

Comments

Popular posts from this blog

நட்சத்திர சாரம் , மூலதிரிகோணம் பற்றிய அறிவியல்

நேர்மையும் .. லக்னத்திற்கு எட்டாம் இடமும்.

ஜோதிடம் என்பது பூமிமையக் கோட்பாடு கொண்டுள்ளதா