சந்திரன் வளர்பிறையில் மட்டுமே சுபராக ஏற்கிறோம் என்பதற்குஅறிவியல் ரீதியாக விளக்கம்
- Get link
- X
- Other Apps
சந்திரன் வளர்பிறையில் மட்டுமே சுபராக ஏற்கிறோம் என்பதற்குஅறிவியல் ரீதியாக விளக்கம்.
மனித இனம் தொடக்கத்தில் பகலில் வெளிச்சம் உள்ள போது மட்டுமே தனக்கு உணவுகாக அலைந்து திரிந்து பெற்று புசித்து பின்னர் இரவு துவங்கியதும் மிருகங்களிடமிருந்து தன்னை காத்துகொள்ள ஒரு குகையில் சென்று ஒளிந்து கொண்டான். நாம் தற்போதும் பகலில் வெளியே அதிக நேரம் செயல் பட்டுஇரவில் வீட்டில் தூங்கி விடுகிறோம்.
இப்போது சந்திரன் ஒளியை கொண்டோ அல்லது ஒளியற்றோ நம்மீது பகலில் பயணிக்கும் காலம் அமாவாசை அன்று தொடர்ந்து பெளர்ணமி வரையில் அதிகம்.
அமாவாசை துவங்கி பெளர்ணமி வரையில் தினமும் பகல் பொழுதில் உதித்து இரவில் மறைவதாலும் நாளுக்கு நாள் ஒளியளவில் அதிகமாகிக் கொண்டே வருவதாலும் வளர்பிறை சந்திரன் சுபர் எனப்படுகிறது.
என்னதான் பெளர்ணமியாக இருந்தாலும் அச்சந்திரன் இரவில் நாம் அனைவரும் வீட்டில் தூக்கிய பிறகு உதித்து வருவதால் அக்கிரகத்தின் ஒளியும் ஆற்றலும் நம்மீது குறைவாக இருக்கும். அமாவாசை வரையில் தினமும் இரவில் உதித்து பகல்பொழுதில் மறைவதாலும் நாளுக்கு நாள் ஒளியளவில் குறைந்து கொண்டே வருவதாலும் தேய்பிறை சந்திரன் பாவர் எனப்படுகிறது.
சுருங்கமாக சொல்ல வேண்டும் என்றால் சூரியனை அரைபாவர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் தெரியும்.
பகலில் மட்டுமே நம்மீது வானில் செல்லும் காலம் பொருத்தே சூரியன் அரைபாவர் எனப்படுகிறது.
இதை அப்படியே சந்திரனுக்கு பொருத்தவேண்டும்.
சநதிரனின் ஒளியவும் அது பகலில் வானில் நம்மீது பயணிக்கும் காலத்தையும் கருத்தில் கொண்டு வளர்பிறையில் சுபர் மற்றும் தேய்பிறையில் பாவர் என பகுக்கப்பட்டுள்ளது.
By
suresh C telker
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment